பிலிப்பைன்ஸ் நாட்டில் இயந்திர கோளாறு காராணமாக நடுக்கடலில் சென்ற படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
48 பயணிகள் மற்றும் 34 பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு மணிலாவின் தெற்கே உள்ள துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்து, படகு முழுவதும் தீ பரவியது.
பலர் உயிர் தப்பிப்பதற்காக கடலில் குதித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் படகில் இருந்தவர்களை மற்றொரு படகு முலம் மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர். படகில் இருந்த 73 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.