உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை வீசி நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியானதாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர், சாப்லினோ ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தார்.
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் நேற்று கொண்டாடியது. இதையொட்டி பேசிய ஜெலன்ஸ்கி, ரஷ்யா தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி சக்திவாய்ந்ததாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.