தென் அமெரிக்க நாடான பெருவில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட மணமக்கள் திருமணம் செய்தனர்.
பெரு - பொலிவியா ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள Titicaca ஏரியின் கரையில் இந்த மெகா திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொண்டனர்.
பாரம்பரிய முறையில் பூமிக்கு மரியாதை செலுத்தி, நீண்டகால ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்ததனை செய்த மணமக்கள், திருமணத்துக்கு பிறகு ஏரியின் கரையில் செல்பி எடுத்துக் கொண்டனர்.