மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் அடுத்த ஆண்டு முதல் மணமான பெண்களும் இளம் தாய்மார்களும் கலந்து கொள்ள விதிகள் தளர்த்தப்படும் என்று அதன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
வருங்காலத்தில் மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளில் பங்கேற்க திருமணமோ, தாய்மை நிலையோ தடையாக இருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை மணமாகாத அல்லது தனியாக உள்ள பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலை இந்த மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த முறை போட்டியின் போது இந்திய அழகி ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.