இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூரை அடுத்து தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்திருக்கும் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை திரும்பும் முன்னதாக அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.