தென்மேற்கு சீனாவில் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் தொடர் மின்வெட்டை எதிர்கொள்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மின்சார பயன்பாடும் அதிகரித்துள்ளது. கடும் வெப்பத்தால் நீர்த்தேக்கங்கள் வறண்டதால் நீர்மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தடைபட்டு மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தொடர் மின்வெட்டு காரணமாக சிச்சுவான் மாகாணத்தின் 19 நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.