இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலை உத்தரவு முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு மக்களின் போராட்டதை கட்டுப்படுத்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவசர நிலையை பிறப்பித்தார். தற்போது போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு சுமூகமான நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே நாளையுடன் முடிவடையும் அவசர நிலை உத்தரவை மீண்டும் நீட்டிக்க வாய்ப்பில்லை என அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.