ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தலிபான்கள் தங்கள் போக்கை மாற்ற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஓராண்டில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.
பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.