ஐரோப்பிய நாடுகளில் நுழைய, அனைத்து ரஷ்யர்களுக்கும் வழங்கப்படும் விசாவுக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தலைமை பதவியை வகிக்கும் செக் குடியரசு, பிராக்கில் (Prague) இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐரோப்பிய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் முறைசாரா சந்திப்பில், இதுகுறித்து பரிந்துரைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
பின்லாந்து, செக் குடியரசு ரஷ்யர்களுக்கு வழங்கி வந்த விசாவை நிறுத்தி வைத்துள்ள நிலையில், இதர ஐரோப்பிய நாடுகளும் இதனை தொடர வலியுறுத்தியுள்ளன.