இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றடைந்தார்.
இலங்கை அரசின் கோரிக்கையை அடுத்து தாய்லாந்தில் அவர் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.கிட்டதட்ட ஒருமாத காலமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த கோத்தபயா நேற்று அங்கிருந்து தாய்லாந்துக்கு இடம் பெயர்ந்தார்.
கடந்த மாதம் மாலத்தீவுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த போது அவருக்கு இரண்டு வார காலம் தங்குவதற்கான விசா அளிக்கப்பட்டது.தாய்லாந்தில் 90 நாட்களுக்கு அவருக்கு தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கோத்தபயா ராஜபக்சே தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்திருப்பதாக கூறப்படும் தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.