இலங்கையில் பெட்ரோல்- டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் அங்கு 50 பெட்ரோல் நிலையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையில் கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதையடுத்து, அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த தட்டுப்பாடு இந்தியன் ஆயில் திறக்க உள்ள 50 பெட்ரோல் நிலையங்கள் மூலம் ஓரளவுக்குத் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.