கிழக்கு ஆப்பிரிக்காவில் 2 அமெரிக்கத் தூதரகங்கள் மீது 1998 ஆம் ஆண்டு தொடர் தாக்குதல் நடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா தலைவன் ஜாவஹிரியை கொன்றதன் மூலம் அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் 24 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், காலம் கடந்தாலும் தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார்.