தைவானை ஒட்டிய கடல்பகுதியில் சீனாவின் போர் ஒத்திகைகள் நான்காவது நாளாக நீடித்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
தொலைதூர வான் மற்றும் நிலம் வழித்தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தப் பயிற்சிகளை நிறுத்தும்படி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மூலம் சீனாவுக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது.
தைவான் ஜலசந்தி அருகே சீன விமானங்களும் கப்பல்களும் தங்கள் பிரதேசத்தில் அத்துமீறியதாக தைவான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ள தைவான், கப்பல்களையும் விமானங்களையும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.