இங்கிலாந்து புதிய பிரதமருக்கான தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனாக்கை விட எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் டிரஸ்சுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட 2-வது கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் லிஸ் டிரஸ்சுக்கு 58 சதவீத ஆதரவு இருப்பதாகவும் ரிஷி சுனாக்கிற்கு 26 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.12 சதவீதப் பேர் முடிவு எடுக்கவில்லை.