மாஸ்கோவில் இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமான நிலையில், மளமளவென பரவிய தீயால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்நச்சுபுகை எழுந்தது.
இஸ்ட்ரா நகருக்கு அருகே உள்ள ஓசோன் நிறுவனத்தின் கிடங்கில் திடீரென தீப்பிடித்த நிலையில், மளமளவென சுற்றிலும் பரவியது. உடனடியாக அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்தனர்.