அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தையொட்டி, இயற்கை மணல் ஏற்றுமதிக்கு தடை உள்பட பல்வேறு பொருளாதார தடைகளை தைவான் மீது சீனா விதித்துள்ளது.
பெலோசி வருகைக்கு ஆரம்பம் முதலே கடும் கண்டனம் தெரிவித்த சீனா, தைவானிலிருந்து பழங்கள், மீன் பொருட்களின் இறக்குமதியையும் தற்போது நிறுத்தி வைத்துள்ளது.
தைவானில் இறக்குமதியாகும் இயற்கை மணலில் 90 சதவீதத்துக்கும் மேல் சீனாவில் இருந்து பெறப்படும் நிலையில், மணல் ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளது.