முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
ஒரு லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களை கொண்டுள்ள ஆரக்கிள் நிறுவனம், பணியாளர்களுக்கு ஆகும் செலவில் 100 கோடி டாலரை குறைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக சான்பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் சிலர் நீக்கப்பட்டுள்ளனர். இதே நடவடிக்கை ஆரக்கிள் நிறுவனம் செயல்படும் இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பா நாடுகளிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம் காரணமாக, மைக்ரோசாப்ட், ஆல்பாபெட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பு அல்லது பணியாளர்கள் தேர்வு செய்வதை குறைக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.