ரஷ்யப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகச் செயல்படுவதாகப் பன்னாட்டுப் பண நிதியம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரையடுத்து மேலை நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ரஷ்யாவைத் தண்டிக்கவும் தனிமைப்படுத்தவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதன் விளைவு நேர்மாறாக அமைந்துவிட இப்போது மேலைநாடுகள் பணவீக்கத்துடன் போராடிப் பொருளாதார மந்த நிலையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மறுபுறம் ரஷ்யா புதிய வணிகக் கூட்டாளிகளை உருவாக்கி வருவதுடன் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வெற்றிபெற்றுள்ளதாகப் பன்னாட்டுப் பண நிதியம் தெரிவித்துள்ளது.