டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் 100-க்கும் மேற்பட்ட பாட்டில்நோஸ் (bottlenose) டால்பின்களை வேட்டை கும்பல் காட்டுமிராண்டித்தனமாக கொன்ற சம்பவம் சர்வதேச அளவில் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொலைதூர தீவுக்கூட்டத்தில் வசிக்கும் வேட்டைக்காரர்கள் கொக்கிகள், கத்திகள் மற்றும் ஈட்டிகளால் டால்பின்களை கொன்றதால், விரிகுடா கடற்பகுதியே சிவப்பு நிறமாக மாறியுள்ளது.