ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நாடாளுமன்ற பாதுகாப்பு சுவரை கீழே தள்ளி ஷியா தலைவர் முக்தாதா அல் சதர் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அல் சதர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய நிலையிலும், கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால் ஆட்சி அமைக்கவில்லை.
எனினும் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. இதை கண்டித்து கடந்த புதன்கிழமை நடாளுமன்றத்துக்குள் புகுந்து அல்சதர் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.