இந்தியா தலைமையில் நடைபெற்ற வங்கதேச விடுதலைப்போரில், பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது, ராசக்கர் பாஹினி ('Razakar Bahini') ஆயுதப்படையினர் கூட்டுப்படுகொலை, தீ வைப்பு மற்றும் சித்ரவதை போன்ற மனிதநேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவர் தலைமறைவாக உள்ளநிலையில், மற்ற 5 பேர் தீர்ப்புக்கு பின் டாக்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.