ஈரானில், இரு ஆண்டுகளுக்கு பிறகு பொதுவெளியில் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் ஷிராஸ் நகரில் காவல் அதிகாரியை கொலை செய்த நபருக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் மரண தண்டனை அறிவித்தது. இதனையடுத்து, பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் கொலையாளி தூக்கிலிடப்பட்டார்.