தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.
தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் ஊழலை தடுப்பதில் தோல்வியடைந்ததாகக் கூறி பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த விவாதத்தின் இறுதியில் பிரயுத்துக்கு 256 எம்பிக்கள் ஆதரவாகவும், 206 எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.