ஈரானில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பார்ஸ் மாகாணத்தில் திடீரென பெய்த கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
எஸ்தாபன் நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் ரவுட்பால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
15 கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை மீட்ட மீட்புக் குழுவினர், காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.
காலநிலை மாற்றம் காரணமாக பல தசாப்தங்களாக வறட்சியை சந்தித்து வரும் ஈரானில், கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.