இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பல ஆண்டுகளாக நடைபெற்ற நிதி முறைகேடு தான் காரணம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கையில் பணவீக்கம் 70 சதவீதம் வரை உயரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்கள் கிடைக்கவுள்ளதாக கூறியுள்ள நந்தலால் வீரசிங்கே, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி மேலும் 4 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.