பாகிஸ்தானில் உற்பத்தி பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் நாட்டில் பல பகுதிகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்கொலை தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாட்டில் தற்கொலை விகிதம் அதிகரிக்கும் அச்சம் உருவாகியுள்ளது.
குறிப்பாக மனநல பிரச்சனைகளுக்கான லித்தியம் கார்பனேட், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வலிப்பு நோய்க்கான குளோனாசெபம் சொட்டுமருந்து போன்றவை அங்கு தற்போது கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.