இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் தோல்வி அடைந்ததால், பிரதமர் மரியோ டிராகி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அதிபர் செர்ஜியோ மாட்டரெல்லாவை சந்தித்து, பதவி விலகும் தனது நோக்கத்தை தெரிவிக்க இருப்பதாக கூறினார்.
காபந்து அரசின் பிரதமராக இருக்கும்படி அவரை அதிபர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணியில் உள்ள 3 முக்கிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. அக்கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து மரியோ டிராகி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இத்தாலியில் பணவீக்கம் உயர்ந்து பொருளாதாரம் நெருக்கடியை நோக்கி நகரும் சூழலில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்தலும் வர இருக்கிறது.