அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடலில் நண்டு பொறியின் கயிற்றில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த டால்ஃபின் மீட்கப்பட்டது.
கிளியர் வாட்டர் நகர் அருகே உள்ள கடலில் நண்டு பிடிக்க போடப்பட்டிருந்த பொறியின் கயிற்றில் இளம் டால்பின் ஒன்று சிக்கிக்கொண்டது. இதனை கண்ட தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், கடல்வாழ் உயிரின அருங்காட்சியக அதிகாரிகளை அழைத்து அவர்களது உதவியுடன் டால்ஃபினை மீட்டு கடலில் விடுவித்தனர்.
அப்போது சரியாக நீந்த முடியாமல் டால்ஃபின் தவித்ததால் பின்னர் அது கடல்வாழ் உயிரினங்கள் மறு வாழ்வு மையமான சீ வோர்ல்டுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.