லண்டனில் விமான ஓடுபாதையின் தார் உருகும் அளவுக்கு உச்சபட்ச வெப்பம் நிலவியதால் லூடன் விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுக்கு பின் லூடன் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
மோசமான வெப்ப நிலையால் ஓடுபாதை பழுதடைந்த நிலையில் நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பல்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.