ஆப்ரிக்காவில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட்ட சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
செலங்கூர் துறைமுகத்திற்கு வந்த கப்பலில், ஆபத்தான பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டிருந்த 3 கண்டெய்னர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 6,000 கிலோ யானை தந்தங்களை இருந்துள்ளன.
இது தவிர, காண்டாமிருக கொம்புகள், புலியின் எலும்புகள், எறும்பு தின்னியின் செதில்கள் என 144 கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய கடத்தல் நடந்துள்ளது தெரியவந்தது.