இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை வீசி வருவதன் எதிரொலியாக அங்குள்ள பிரைட்டன் பீச்சில் ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
தெற்கு இங்கிலாந்தில் திங்கள் மற்றும் செவ்வாயன்று வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை விட அதிகரிக்கக்கூடும் என கணித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம், சில பகுதிகளில் ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து சில பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.