சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் விமான எரிபொருள் விலை 2.2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
விமான எரிபொருளின் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு கிலோ லிட்டருக்கு 3 ஆயிரத்து 84 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 147 ரூபாய்க்கு தற்போது விற்பனையாகிறது.
பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதே விமான எரிபொருள் விலை குறைய காரணமாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது.