ஸ்பெயினில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் வடபகுதி மக்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வனத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர் வழக்கத்திற்கு மாறாக 108 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் நீடிப்பதால் கடற்கரை, தண்ணீர் பூங்காக்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.