உலகளவில் வாழத்தகுதியுடைய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் 5 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
உலகம் முழுவதும் சுமார் 173 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், டெல்லி 140-வது இடத்தையும், மும்பை 141-வது இடத்தையும், சென்னை 142-வது இடத்தையும் பிடித்துள்ளன.
பெங்களூரு 146-வது இடத்தை பிடித்தது. உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்பட பல்வேறு கூறுகளை கொண்டு ஆய்வு நடத்தியதில், பெங்களூரு மோசமான உள்கட்டமைப்பை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.