செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு.! பிரச்சாரத்தின்போது பயங்கரம்.!

Jul 08, 2022 01:46:01 PM

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தல் பிரச்சாரத்தின் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜப்பான் மேலவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், நாரா என்ற நகரில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஷின்சோ அபேவுக்கு பின்னால் நின்றிருந்த நபர், 3 மீட்டர் தூரத்தில் வைத்து, 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் அபேவின் நெஞ்சு பகுதியிலிருந்து ரத்தம் வடிந்துள்ளது. ஜப்பான் நேரப்படி காலை 11.30 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்ற நிலையில், ஷின்சோ அபே சுயநினைவு இழந்து கிழே விழுந்தார்.

உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் நாரா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 67 வயதான அவரின் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்துவிட்டதாக, முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், திடீரென மாரடைப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

உயிர்க்காக்கும் சிகிச்சை அளித்தும் ஷின்சோ அபேவின் உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஷின்சோ அபேவை சுட்ட யமாகாமி டெட்சுயா என்பவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் வரலாற்றில் நீண்டகாலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை ஷின்சோ அபே பெற்றிருந்தார். முதலில் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 2012 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும் பிரதமராக இருந்த அபே, உடல் நலக்குறைவினால் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

தனது நெருங்கிய நண்பரான ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், தங்கள் எண்ணங்களும், வேண்டுதல்களும் ஷின்சோ அபே மற்றும் அவரது குடும்பத்தினருடனும் ஜப்பான் மக்களுடனும் இருப்பதாக கூறியுள்ளார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்டுள்ள, துப்பாக்கிச் சூடு மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான நிலவரங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது என்றும் சகிக்க முடியாதது என்றும் ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். ஷின்சோ அபேவின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Advertisement
அமெரிக்க அதிபர் தேர்தல் டொனால்ட் டிரம்ப் மனைவி மெலானியாவுடன் வந்து வாக்களித்தார்
இஸ்ரேல் பணயக் கைதிகளில் 50 பேர் மட்டுமே உயிருடன் இருப்பு - உறவினர்கள் சாலை மறியல்..
தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?
விண்வெளியில் உயிரியல் தொடர்பாக 90 ஆய்வுகளை மேற்கொண்ட சீனா.!
தொலைநோக்கி தொடர்பான ஆர்வலர்களுக்கு தொழில் நுணுக்கம் குறித்தும் கற்பிக்கிறார் ஆப்டிகல் டிசைனர்.!
அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனப் பேரணி
அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் - டிரம்ப் உறுதி
ஹெஸ்பொல்லா மூத்த நிர்வாகியை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்
ஸ்பெயினில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய விமானப்படை
ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் சிறை, அபராதம்

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்


Advertisement