உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவுக்கு வருத்தம் தெரிவித்து, அவரது ‘தலைமையையும் ஆளுமையையும்’ பாராட்டினார் .
கடினமான காலங்களில் உக்ரைனுக்குத் துணை நின்றதாக அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை "சிறிய மோதலாக" கருதாமல், உலக அரசியலாக உடனடியாக மாற்றியமைத்ததற்காக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்களும் தம்முடன் அனுதாபம் தெரிவிப்பதாக அவர் போரிஸ் ஜான்சனுடனான தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.