இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய துணை வகை திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், BA.2.75 எனப்படும் அந்த புதிய வைரஸ் பாதிப்பு இந்தியா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதனை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் முறையே, BA.4 மற்றும் BA.5 ஆகிய வைரஸ்களால் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்றார்.