இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோட்டபய ராஜபக்சேவை வெளியேறக்கோரி, எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பியதால் அவர் அவையிலிருந்து வெளியேறினார்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அடுத்தாண்டு இறுதி வரை நீடிக்குமென அந்நாட்டு பிரதமர் தெரிவித்த நிலையில், நாடாளுமன்றத்தில் இருந்த அதிபருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.