ஆப்கானிஸ்தானில் வறுமை அதிகரித்துள்ளதால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
இஸ்லாமியர்களின் இரண்டு முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆப்கனில் வருகின்ற 9ம் தேதி தொடங்குகிறது.
வழக்கமாக பண்டிகையையொட்டி கால்நடை விற்பனை அதிகரிக்கும் நிலையில், தற்போது மக்கள் பலர் வறுமையால் வாடுவதால் சந்தைகளில் கால்நடைகள் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.