பாகிஸ்தானில் மின் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக மூடப்பட்ட மின் நிலையங்களை மீண்டும் திறக்க அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் மின் பற்றாக்குறை 7 ஆயிரத்து 787 மெகாவாட்டை எட்டியுள்ளதால், பல்வேறு நகரங்களில் 16 மணி நேரம் வரை மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மின் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர், கடந்த ஓராண்டில் மூடப்பட்டிருந்த மற்றும் தொழில்நுட்ப கோளாறால் செயல்படாமல் இருந்த 18 மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறக்க உத்தரவிட்டார்.