40 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் இருந்து மொசாம்பிக் நாட்டில் உள்ள ஜின்னாவே உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 19 வெள்ளை காண்டாமிருகங்களை பொதுமக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.
ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரம் வரை டிரக்கில் அவை பயணித்து வந்திருப்பதாக பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார்.
வன விலங்குகளை மீட்டெடுப்பதுடன், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியாகவும் அவை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார்.