சவூதி அரேபியாவின் புனித நகரான மெக்காவில் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக புனித ஹஜ் பயணத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை அதில் ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் மெக்காவிற்குப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து புனித யாத்திரைக்கு வருவோர் 72 மணி நேரத்துக்கு முன்பாக கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழும், தடுப்பூசி செலுத்தியிருப்பதும் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.