ஹாங்காங் அருகே தென் சீன கடல் பகுதியில் 30 பணியாளர்களுடன் சென்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக நடுக்கடலில் மூழ்கியது.
ஹாங்காங்கிற்கு 300 கிலோ மீட்டர் தெற்கே தொழில்துறை பயன்பாட்டுக் கப்பலொன்று சென்று கொண்டிருந்த போது, தென் சீன கடல் பகுதியை கடந்து சென்ற சாபா வெப்பமண்டல புயலால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு நடுக்கடலில் மூழ்கியது.
இதில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்த நிலையில், 3 பேர் மட்டுமே மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஹாங்காங் அரசின் விமான மீட்புக் குழு தெரிவித்துள்ளது.