உலகில் 110 நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று முடிவடையவில்லை என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ், கொரோனா தொற்று உருமாறி வருவதாக தெரிவித்தார்.
வேகமாக பரவும் ஒமிக்ரான் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை அமெரிக்காவில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றில் 50 சதவீதம் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.