ஆசியாவில் இலங்கைக்கு அடுத்தப்படியாக கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் பாகிஸ்தானுக்கு 2.5 பில்லியன் டாலரை சீனா கடனாக வழங்குகிறது.
அதிக பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு, விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சீனா வழங்க உள்ள நிதி அதன் குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2 பில்லியன் டாலர்கள் கிடைக்கும் என பாகிஸ்தான் நம்புவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.