ரஷ்யாவின் போருக்கு எதிராக ஜி7 மற்றும் நேட்டோ நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் 3 நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸியுடன் உரையாடிய ஜோ பைடன், ஐரோப்பாவின் மேற்கு நாடுகளை ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினார்.
ஜி7 மற்றும் நேட்டோ அமைப்பு எப்படியாவது பிளவுபடும் என்று புதின் நம்புவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.