இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை பாதுகாப்பு கப்பலின் எச்சங்கள் பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிலிப்பைன்ஸின் சமர் தீவில் நடந்த போரில், யுஎஸ்எஸ் சாமுவேல் பி ராபர்ட்ஸ் (USS Samuel B Roberts) கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்த கப்பலில் பயணித்த 224 பேரில் 89 பேர் உயிரிழந்தனர்.
80 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்த இந்த கப்பலின் எச்சங்களை 22 ஆயிரத்து 621 அடி ஆழத்தில் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.