ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களை இயங்க வைக்கும் பேட்டரியை உருவாக்கியுள்ளதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவின் முன்னணி லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பாளரான சி.ஏ.டி.எல். என்ற நிறுவனம், கியூலின் என்ற பெயரில் அந்த பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் 4680 பேட்டரியைவிட தங்கள் நிறுவன தயாரிப்பு 13 சதவீதம் கூடுதல் ஆற்றலை வழங்குவதோடு, விரைவாக சார்ஜ் செய்யும் வகையிலும், அதிக ஆயுள் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுளதாக சி.ஏ.டி.எல். விளக்கமளித்துள்ளது.