அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைச்சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 13 மாகாணங்கள் உடனடியாக கருக்கலைப்புக்கு தடை விதித்ததாக கூறப்படும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் கருக்கலைப்பு கிளினிக்குகள் மூடப்பட்டு வருகிறது.