அறிவித்தப்படி மண்ணெண்ணெய் வழங்காததால், இலங்கையில் எரிபொருள் விற்பனை அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தலைநகர் கொழும்புவில் உள்ள விற்பனை மையத்தில் மண்ணெண்ணெய்க்காக நேற்று இரவு முதலே ஏராளமானோர் காத்திருந்தனர்.
இந்நிலையில் மண்ணெண்ணெய் இல்லை என அறிவிப்பு வெளியானதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஹட்டன்-கொழும்பு, கட்டன்-கண்டி உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது.